வண்ணைகணேசன், கொளத்தூர்

பா.ம.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூடுவதுதான் என்று சவுமியா பேசியிருக்கிறாரே?

Advertisment

கண்ணுக்கெட்டிய தூரம் நாம் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் அடித்துவிடலாம்.  

Advertisment

mavali1

எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு

கொடிநாள் நிதியாக கவர்னர் ஆர்.என். ரவி 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ள சம்பவம் குறித்து?

மாநிலத்துக்கே ஆளுநர் 500, 1000 எழுதினால் சரிப்படுமா? அதுவும் சூப்பர் முதல்வர் போல, முதல்வருக்கே போட்டியாக இயங்குகிறவர். ஒரு 5 லட்சமாவது நிதி கொடுத்தால்தானே கௌரவமாக இருக்கும். ஆளுநரைப் பார்த்து உத்வேகம் பெற்று பலரும் பெரிய தொகை வழங்குவார்களல்லவா! ஆனால் இன்னமும் நமது தேசத்தில் ஆர்.ஐ., வி.ஏ.ஓ. மாதிரி ஆட்கள் கையெ ழுத்து வாங்க வருகிறவர்களிடம் வம்படியாகத்தான் கொடிநாள் நிதி வசூலிக்கவேண்டியிருக்கிறது.

Advertisment

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"ரூபாய் மதிப்பு சரிவது நமக்கு நல்லது என்கிறார்களே...' சில அறிவாளிகள்?

ரூபாய் மதிப்பு சரிவதிலும், உயர்வதிலும் சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன. அதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. அமெரிக்க டாலரைவிட இந்திய ரூபாய் மதிப்பு குறைவாக இருக்கும்போது, தகவல் தொழில்நுட்பத் துறை, மருந்து கம்பெனி களுக்கு ஏற்றுமதியால் ஆதாயம் கிடைக்கும். பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போது நாம், அதிக பணம் தரவேண்டியிருக்கும். சமயங்களில் இந்தியாவில் முதலீடு செய்ய குறைந்த பணம் போதுமென்பதால் சில முதலீடுகள் வரலாம். ஆனால் பணவீக்கம் அளவுக்கதிகமாக அதிகரித் தால், இந்திய ரூபாயின் மதிப்பு தரைமட்டமாகச் சரிந்து பிற நாடுகளால் சீண்டாத அளவுக்கு ரூபாய் போய்விடும் அபாயமும் இருக்கிறது. ரூபாய் மதிப்பு சரிவது நல்லதென்றால், கடந்த ஒன்றரை ஆண்டாக ரிசர்வ் வங்கி டாலரை விற்று, ரூபாய் சரிவைத் தடுக்க முயல்வது ஏன்?

எச்.மோகன், மன்னார்குடி

பொருளாதாரத்தில் மிகவும் தள்ளாட்டத் தில் இருக்கும் நாடு எது?

ஐ.நா. சபையின் மிகக்குறைந்த வளர்ச்சி கொண்ட நாடுகளாக பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகள் ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, ஹைட்டி. இவை தவிர சூடான், சோமாலியா என பெரிய பட்டியலே இருக்கிறது.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

"சட்டங்களும், விதிமுறைகளும் மக்களைத் துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது' என்கிறாரே மோடி?

ஆதார், பண மதிப்பிழப்பு, மானியங்களை வங்கிக் கணக்குக்கு மாற்றுவதாகக் கூறி, சமையல் எரிவாயு உருளையில் செய்ததுபோல் மானியத்தை சிறு தொகையாக மாற்றியது, எஸ்.ஐ.ஆர். அலைக்கழிப்பு, சட்டங்கள் முதல் புதிய திட்டங்களின் பெயர்வரை அனைத்தையும் ஹிந்தியிலே மாற்றுவதெல்லாம் எந்த வகைப்பாட்டில் வரும் பிரதமர் சார்?


ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

எத்தனால் பெட்ரோலால் வாகன ஓட்டிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என்று நிதின் கட்கரி கூறியுள்ளாரே?

பெட்ரோலில் எத்தனால் கலக்கவில்லையென் றால், நிதின் கட்கரியின் மகனுடைய சியான் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்துக்கு பாதிப்பு என்பதையாவது ஒப்புக்கொள்வாரா?

எஸ். இளையவன், சென்னை 

"விடுமுறைக்குப் பின் விடுதிக்குச் செல்லும் மாணவிகளுக்கு கர்ப்ப சோதனை கட்டாயம்' என மராட்டிய அரசு புதிய விதிமுறை வகுத்துள்ளதே...?

இது மாணவிகளை அவமானப்படுத்தும் நடைமுறை. விடுமுறைக்குச் சென்ற இடத்தில் மாணவிகள் ஒழுக்கம் தவறுவார்கள் என எதனை வைத்து மராட்டிய அரசு முடிவுக்கு வந்தது. ஒருவேளை அப்படி விடுதியில் இருக்கும்போது கர்ப்பமானால், சம்பந்தப்பட்ட மாணவிமேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக எல்லா மாணவிகளை யும் சந்தேகப்பட்டு சோதிப்பது தவறான அணுகுமுறை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி. 

"பெண்களை மணப்பது குழந்தை பெறு வதற்கு மட்டுமே' என கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கூறி சர்ச்சையில் மாட்டிக் கொண்டாரே? 

சமீபத்தில் பீகார் முதல்வர் மருத்துவர் களுக்கான வேலை உத்தரவை வழங்குகை யில் முஸ்லிம் பெண்ணின் நிகாப்பை பிடித்து இழுத்து சர்ச்சையைக் கிளப்பினார். அது குறித்து கமெண்ட் செய்த உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத், "என்ன இருந்தாலும் நிதிஷ் குமார் ஒரு ஆண், முகத்துக்குப் பதில் வேறெங்காவது தொட்டிருந்தால் என்னா யிருக்கும்?' எனக் கேட்டு அசிங்கமாகச் சிரித்தார். முட்டாள்களுக்கு மத, இன, அரசியல் பேதம் இல்லை.